• Home
  • Insights
  • உங்கள் AI agent எதைச் செய்யலாம்?

By Keshavan Thiagaraja

Invoice ஒன்றைத் தயாரிக்கும் AI agent இற்கும், அதற்கான payment ஐச் செய்யும் AI agent இற்கும் ஒரே அதிகாரம் தேவையில்லை.

எவ்வளவு autonomy வழங்கலாம் என்பது மட்டும் தலைமைத்துவக் கேள்வியல்ல. அது எங்கே பயன் தருகிறது, எங்கே ஒரு தவறு நிறுவனத்திற்குப் பொறுப்பை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.

தேவையற்ற autonomy ஐத் தவிர்த்தல், permissions ஐ வரையறுத்தல், அதிக தாக்கமுள்ள செயல்களுக்கு human confirmation பெறுதல் ஆகியவற்றை OWASP Top 10 for Agentic Applications 2026 பரிந்துரைக்கிறது.

Capability வேறு. Authority வேறு.

வாசிப்பதும் மாற்றுவதும் வேறு. Draft தயாரிப்பதும் அனுப்புவதும் வேறு. பரிந்துரைப்பதும் நிறுவனத்தின் சார்பில் உறுதியளிப்பதும் வேறு. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான எல்லைகளை வடிவமைக்க வேண்டும்.

CEOs மற்றும் CTOs செய்ய வேண்டியவை

ஒரு workflow ஐத் தெரிவுசெய்யுங்கள். AI agent எதை வாசிக்கலாம், மாற்றலாம், அனுப்பலாம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். அந்த workflow இற்குத் தேவையான access ஐ மட்டும் வழங்குங்கள்.

Payments, deletions மற்றும் அதிக தாக்கமுள்ள ஏனைய செயல்களுக்கு முன்னர் explicit approval பெறும் படியை அமையுங்கள். Approval கேட்பதற்கு முன்னர் செய்யவுள்ள செயலைக் காட்டுங்கள்.

Audit trail வைத்திருங்கள். Access ஐத் திரும்பப் பெறவும் workflow ஐ நிறுத்தவும் முடியுமா என்பது உட்பட, தவறு ஏற்படும் நிலைகளையும் சோதியுங்கள்.

முதலில் draft மட்டும் தயாரிக்கும் pilot உடன் தொடங்குங்கள். அளவிடப்பட்ட பெறுபேறுகளும் சோதிக்கப்பட்ட controls உம் நியாயப்படுத்தும்போது மட்டுமே autonomy ஐ விரிவாக்குங்கள்.

அழகாக எழுதப்பட்ட பதில், பாதுகாப்பான செயலுக்கான சான்றல்ல. பயனுள்ள capability உடன் தெளிவான பொறுப்புக்கூறலையும் இணைப்பதே பொறுப்பான AI design.

உங்கள் நிறுவனத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கு முன்னர் AI agent கட்டாயம் human approval பெற வேண்டும்?

Think mathematically. Engineer intelligently. Lead strategically. Build responsibly. Scale globally. Create real business value through artificial intelligence.

#AgenticAI #AIStrategy #EnterpriseArchitecture #ResponsibleAI #ITImpress

Share this post

Subscribe to our newsletter

Keep up with the latest blog posts by staying updated. No spamming: we promise.
By clicking Sign Up you’re confirming that you agree with our Terms and Conditions.

Related posts